பொதுவாக வழக்குகளில் சிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீஸார் அவைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கம். இப்படியாக சிக்கும் வாகனங்களை நீதிமன்றத்தில் மூலம் திரும்ப பெறவேண்டும். எனினும் சிலர் வாகனங்களை திரும்ப பெறுவதில்லை. அதனால் காவல் நிலைய வளாகங்கள் மினி பார்க்கிங் ஏரியா போலவே காணப்படும். இந்தநிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை சட்டப்படி அகற்ற போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் வழக்குகளின் விவரங்கள் அடிப்படையில் வாகனங்களை போலீஸார் கணக்கெடுத்தனர். அப்போது சில வாகனங்கள் மாயமாகியிருப்பது தெரியவந்தது.

அதுதொடர்பாக போலீஸார் விசாரித்தபோது சி.சி.டி.வி காட்சி ஒன்று வெளியானது. அதில் விலை உயர்ந்த பைக்குகளை காவல் நிலையத்திலிருந்து மினி லாரி மூலம் ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து பைக்குகளை ஏற்றிச் சென்றவர்கள் குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் காவல் நிலையத்தில் பைக்குகள் மாயமான விவகாரத்தில் மூன்று காவலர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் மாயமான பைக்குகள், மெக்கானிக் ஷாப்பில் இருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து இந்தத் தகவல் போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக சி.சி.டி.வி ஆதாரம் மற்றும் விசாரணை அடிப்படையில் மூன்று காவலர்களையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறக்கப்பட்டது. இதையடுத்து பைக் மாயமான குற்றச்சாட்டில் சிக்கிய காவலர்கள் ஜெகன், சத்திய பிரபு, மணி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல் நிலையத்திலிருந்து பைக்குகள் திருடப்பட்ட குற்றச்சாட்டில் மூன்று காவலர்கள் சிக்கியிருக்கும் தகவல் காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY