பெலகாவி : சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்வதை எதிர்த்த மனைவியை சரமாரிய தாக்கிய கணவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெலகாவி மாவட்டம், ஹருகொப்பா கிராமத்தை சேர்ந்தவர்கள் பைரப்பா கன்னேரவாரா – மாயவ்வா. இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
இந்த சிறுமியை பெண் கேட்டு, பைரப்பா கன்னேரவாரா தம்பியின் மனைவியின் உறவினர் குடும்பத்தினர் வந்தனர்.
இவர்களுக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது. அதனால் திருமணத்திற்கு பைரப்பா கன்னேரவாரா சம்மதம் தெரிவித்தார்.
ஆனால், அவரது மனைவி மாயவ்வாவோ, “என் மகள் படிக்க வேண்டும். எனவே, அவளுக்கு திருமணம் வேண்டாம்,” என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த கணவர், மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில், மாயவ்வாவின் கைகள், கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பைலஹொங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரிடம், கணவர், அவரது சகோதரர் மீது புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement