வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் மோதுகின்றனர்.
அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படும். கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். பைடன் பதவிக் காலம் நிறைவடைய இருக்கிறது. இதனால் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன் களம் இறங்குகிறார்.
குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இருவரும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராக களமிறங்க அந்தந்த கட்சிகளுக்குள் எதிர்ப்பு இல்லாததால் இருவரும் அதிபர் தேர்தலில் களமிறங்குவதற்கு வழிவகை செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement