
சிரஞ்சீவி படத்தில் இத்தனை நடிகைகளா?
பிம்பிசாரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படமாக 'விஷ்வாம்பரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கின்றார் என அறிவித்திருந்தனர். மற்றொரு கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரியும் நடிக்கிறார். இவர்கள் அல்லாமல் சுரபி, ஆஷிகா ரங்கநாத், இஷா சாவ்லா ஆகியோர் சிரஞ்சீவிக்கு தங்கைகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மிருணாள் தாகூர் சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்கிறார்கள்.