எஸ்.பி.ஐ அளித்த தேர்தல் பத்திர தரவுகளை, தேர்தல் ஆணையம் இரண்டு பட்டியலாகத் தனது இணையதளப் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறது. அதில், ஒரு பட்டியலில் எந்தெந்த நிறுவனங்கள்/தனிநபர் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள் என்று தரவுகள் இருக்கின்றன.

மற்றொரு பட்டியலில், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன என்று தரவுகள் இருக்கின்றன. ஆனால், எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றன எனத் தரவுகள் இல்லை.
மேலும், இந்த இரு தனித்தனி பட்டியலில், தேதி, நிறுவனங்கள்/தனிநபர்/அரசியல் கட்சிகளின் பெயர்கள், நிதியின் மதிப்புகள் மட்டும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், சீரியல் நம்பர் எதுவும் இடம்பெறவில்லை. அதேசமயம், அம்பானி, அதானி ஆகியோரின் பெருநிறுவனங்களின் பெயர்கள் எதுவும் நேரடியாக இடம்பெறவில்லை. அதேசமயம், அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் பட்டியலில் ரூ.1,368 கோடியுடன் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பி.ஆர் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் லாட்டரி மார்டினுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
அதிக நிதி கொடுத்த டாப் 10 நிறுவனங்கள்:
ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பி.ஆர் – ரூ.1,368 கோடி
மேகா இன்ஜினியரிங் அண்ட் உள்கட்டமைப்புகள் நிறுவனம் – ரூ.966 கோடி
Qwik சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் – ரூ.410 கோடி
வேதாந்தா லிமிடெட் – ரூ.400 கோடி
ஹால்டியா எனர்ஜி லிமிடெட் – ரூ.377 கோடி
On 11 April 23, Megha Engineering gives 100s Crs in #ElectoralBonds to whom? But within a month it gets a 14,400 cr contract from BJP’s Mah govt! Though SBI has hidden Bond numbers from the info, some of donors & parties match can be guessed. Most donations seem a quid pro quo pic.twitter.com/KoiZss64Dl
— Prashant Bhushan (@pbhushan1) March 14, 2024
பார்தி குழுமம் – ரூ.247 கோடி
Essel மைனிங் அண்ட்இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் – ரூ.224 கோடி
வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் – ரூ.220 கோடி
கெவென்டர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா லிமிடெட் – ரூ.195 கோடி
மதன்லால் லிமிடெட் – ரூ.185 கோடி