வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சிலிண்டர் விலை குறைப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும்
ரூ. 2 வரை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 663 நாட்களுக்கு பின் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் நீடித்தது.இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (மார்ச்.14) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்து உள்ளார்
லோக்சபா தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு விரவைில் வெளியாகவுள்ள நிலையில் மத்திய அரசு அதிரடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 100 வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
சென்னையில் எவ்வளவு ?
சென்னையில் பெட்ரோல் ரூ;10263 பைசாவாக இருந்தநிலையில் தற்போது விலை குறைப்புக்குபின் 100 ஆக உ்ளளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement