வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்களின் விபரங்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2017ல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, நம் நாட்டை சேர்ந்த தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்; இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டு ரகசியம் காக்கப்பட்டன.
இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது’ என, கடந்த மாதம், 15ம் தேதி தீர்ப்பளித்தது.அது தொடர்பான தகவல்களை, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும். அந்த விபரங்களை, மார்ச், 13ம் தேதிக்குள் தன் இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இன்று தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ., அளித்தது..
முதல் பகுதி பர்ஸ்ட் பார்ட் 327 பக்கம் ஆகவும், 2-வது பகுதி ( 2-nd பார்ட்) 426 பக்கங்களை கொண்டதாகவும் உள்ளது இதில் பர்ஸ்ட் பார்ட்டில் தேதி மற்றும் மாதம், ஆண்டு வாரியாக நன்கொடை தந்த நிறுவனங்கள் விவரங்களும் 2-வது பார்ட்டில் தேதி, மாதம் ஆண்டு வாரியாக கட்சிகள் பணம் பெற்ற விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளது
திட்டமிட்டபடி நாளை (மார்ச்.15) இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் முன்கூட்டியே இன்று (மார்ச்.14) தேர்தல் ஆணைய இணைய தளமான www.eci.gov.in/canditate politicaalparty என்ற இணையதளத்தில் பதிவேற்றியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement