The worlds biggest rocket soared into the sky | விண்ணில் சீறிப்பாய்ந்தது உலகின் மிகப்பெரிய ராக்கெட்

மெக்ஸிகோசிட்டி: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய
ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ராக்கெட் நேற்று விண்ணில்
செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக
பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி
நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு
விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப்
“சூப்பர் ஹெவி” எனப்படும் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் 394-அடி (120-மீட்டர்) உயரத்துடன் 33 என்ஜின்களை
கொண்டுள்ளது.

தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள
ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில்
செலுத்தப்பட்டது. ஏற்கனவே இரு முறை முயற்சி தோல்வியைடைந்ததால் மூன்றாவது
முறையாக விண்ணில் செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.