மும்பை, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு, 81, மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனுக்கு நேற்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அமிதாப்புக்கு, ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ அறுவை சிகிச்சை செய்து இதயத்தில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனை தரப்பிலோ அல்லது அமிதாப் குடும்பத்தினர் தரப்பில் இருந்தோ அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அமிதாப் பச்சனுக்கு கடந்த ஜனவரியில் மணிக்கட்டில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் அவர் கையில் கட்டுடன் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement