Russian presidential election: Vladimir Putin has leaked online | ரஷ்ய அதிபர் தேர்தல் : ஆன்லைன் வாயிலாக ஒட்டளித்தார் விளாடிமிர்புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் இன்று துவங்கியது. ஆன்லைன் வாயிலாக ஓட்டளித்தார் அதிபர் விளாடிமிர்பு டின்.

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று துவங்கிய அதிபர் தேர்தல் வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது.

புதிய அதிபரை தேர்வு செய்ய ரஷ்ய மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அதே நேரம் பல்வேறு நாடுகளில் வாழும் ரஷ்யர்கள் அந்தந்த தூதரகங்களில் வாக்களித்தனர்.

இந்நிலையில் உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ஆன்லைன் வாயிலாக நடந்த ஒட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிபர் மாளிகையான கிரம்ளின் மாளிகையில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஆன்லைன் வாயிலாக தனது ஒட்டளித்தார் அதிபர் விளாடிமிர் புடின்.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். இவரைத் தவிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் நிகோலாய் கரிடோனோவ், தேசியவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் புதிய மக்கள் கட்சியின் விளாடிஸ்லாவ் டாவன்கோவ் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

தேர்தலில் 4 முனை போட்டி இருந்தாலும், புதின் மீண்டும் வெற்றி பெற்று 5-வது முறையாக அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.