
குழந்தைக்கு தாயாகும் மகிழ்ச்சியில் ரித்திகா
விஜய் டிவியின் ராஜா ராணி, பாக்கியலெட்சுமி தொடர்களின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் ரித்திகா தமிழ் செல்வி. இவர் கடந்த 2022ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ரித்திகா தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் க்யூட்டாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரித்திகாவுக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.