12 states have more women voters: Election Commissioner | 12 மாநிலங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம்: தேர்தல் ஆணையர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள பொது தேர்தலில் 12 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என தலைமை தேர்தல்ஆணையர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தலைமை தேர்தல்ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்து இருப்பதாவது: நாடு முழுவதும் பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது ஏப்,19-ல் துவங்கி ஜூன் 1 -ம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 96.8 கோடி பேர் இதில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடியாகவும், பெண் வாக்காளர்கள் எண்ணி்க்கை 47.1 கோடியாகவும் உள்ளனர் நாட்டில் பாலின விகிதமாக 1000 ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர் இது தேர்தல் சுழற்சியில் பெண்கள் பங்கேற்பதற்கான மிகவும் ஆரோக்கியமான அறிகுறியாகும்.

மேலும் 1.89 கோடி புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர் அவர்களில் 18-19 வயதுக்குட்பட்ட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 85.3 லட்சம் ஆகும். என கூறினார்.

அதே நேரத்தில் தலைமை தேர்தல்ஆணையர் 12 மாநிலங்களின் பெயர்களை வெளியிட வில்லை.

கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் ஆண்வாக்காளர்கள் 47.3 கோடி பெண் வாக்களர்கள் 43.8 கோடி என மொத்தம் 91.2 கோடி பேர் வாக்களித்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.