பிரயாக்ராஜ்:உத்தர பிரதேசத்தில், அபின் செடி பயிரிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 57 கிலோ கச்சா அபின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஓபியம் பழங்கள் அழிக்கப்பட்டன.
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் அருகே, அம்ரேஹா கிராமத்தில் சிலர் அபின் செடி பயிரிட்டுள்ளதாக, போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
யமுனா நகர் போலீஸ் துணை கமிஷனர் ஷ்ரத்தா நரேந்திர பாண்டே தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, 20 சதுர மீட்டர் பரப்பளவில் அபின் செடிகள் பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பயிரிட்ட மிஷ்ரி லால் மற்றும் பஞ்சராஜ் குஷ்வாஹா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும்,, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27.60 கிலோ கச்சா அபின் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீது குர்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, கங்கா நகர் ஹண்டியா அருகே, 1,500 அபின் செடிகள் மற்றும் 1,718 ஓபியம் பழங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக விஜய் சந்திர மவுரியா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓபியம் பழங்கள் அழிக்கப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement