
அனுஷ்காவின் மலையாள படத்தில் இணைந்த பிரபுதேவா!
தெலுங்கில் கடந்த ஆண்டு மிஸ் செட்டி மிஸ்டர் பாலிசெட்டி என்ற படத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது மலையாளத்தில் காதனர் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அனுஷ்காவாக ஸ்லிம் ஆகி இருக்கிறார். ரோஜின் தாமஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் அனுஷ்கா நெகட்டிவ் ரோலில் நடிக்க, மலையாள நடிகர் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது பிரபுதேவாவும் இந்த காதனர் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர், அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா இல்லை வேறு ஏதேனும் கேரக்டரில் நடிக்கிறாரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.