தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மகள் திருமணம்

தமிழில் 'வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா, தெய்வப் பிறவி, மைக்கேல் ராஜ், கைநாட்டு' உள்ளிட்ட படங்கள் தெலுங்கில் ஏராளமான படங்கள், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் படங்களைத் தயாரித்தவர் மறைந்த தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு. அவரது இரண்டாவது மகன் வெங்கடேஷ் தெலுங்கில் சீனியர் நடிகர்களில் ஒருவர்.

சென்னையில் பிறந்து லயோலா கல்லூரியில் படித்து வளர்ந்தவர் வெங்கடேஷ். அவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். மூத்த மகளுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகள் ஹயவாஹினிக்கு ஐதராபாத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. மணமகன் நிஷாந்த் ஒரு டாக்டர். நாளை மறுதினம் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.

நேற்று ஐதராபாத்தில் வெங்கடேஷ் வைத்த திருமண பார்ட்டியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் நடிகர் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரை வெங்கடேஷின் அண்ணன் மகன் நடிகர் ராணா டகுபட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.