டில்லி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த அறிவது குறித்த வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகளையும் தெரிவித்துள்ளது. குறிப்பாகக் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அது குறித்து பொதுமக்களுக்கு விரிவான தகவல்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது தங்கள் மீதான வழக்குகள், அதற்குப் பெற்ற தண்டனை விவரங்கள் போன்றவை குறித்து விரிவாக அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பை தங்கள் தேர்தல் பிரசார […]
