அஜ்மீர், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அடுத்த சபர்மதி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையம் நோக்கி, நேற்று முன்தினம் அதிவிரைவு ரயில் புறப்பட்டது.
ஏறத்தாழ 1,000க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்ற இந்த ரயில், அதிகாலை 1:00 மணியளவில் அஜ்மீர் அடுத்த மதார் ரயில் நிலையம் அருகே சென்றபோது, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர், தடம் புரண்ட நான்கு ரயில் பெட்டிகளில் சிக்கித் தவித்த பயணியரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், ரயிலின் இன்ஜின் உட்பட நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின.
மேலும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிலர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
விபத்து நடைபெற்ற பகுதியில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு, சில மணி நேரத்திற்கு பின் இந்த ரயில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக இந்த வழித்தடத்தில் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement