உடுப்பி: ”பண பலத்தால் எனது தந்தை பங்காரப்பாவை, பா.ஜ., – எம்.பி., தோற்கடித்தார்,” என, அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, பைந்துாரில் நேற்று அளித்த பேட்டி:
காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை, பா.ஜ., மாற்றுகிறது. ‘அந்த திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டி, நாங்கள் தான் செய்தோம்’ என, பாஜ., தலைவர்கள் பொய் பேசுகின்றனர்.
ஷிவமொகா பா.ஜ., – எம்.பி., ராகவேந்திரா தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. கடந்த 2009 லோக்சபா தேர்தலில், எனது தந்தை பங்காரப்பாவை, பணபலத்தால் தோற்கடித்தார். பங்காரப்பா முதல்வராக இருந்தபோது செய்த, பணிகள் பற்றி மக்கள் இன்னும் பேசி வருகின்றனர்.
கடந்த 2014 தேர்தலில் கீதா சிவராஜ்குமார் தோல்வி அடைந்தார். ஆனாலும் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் அரசு அளித்த, ஐந்து வாக்குறுதிகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
ஆதாயம் பெறுவதற்காக சில நிறுவனங்கள், தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்து உள்ளது. அனைத்து விபரங்களும் வெளியாகும்போது உண்மை வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement