தேர்தல் நேரம்… மூச்சுவிட்டால் கூட பயமாக உள்ளது : ரஜினி பேச்சு

நடிகர் ரஜினகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. சென்னையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவில் பேசிய அவர், ‛‛நான் எந்த ஒரு கட்டடம் திறப்பு விழாவுக்கு சென்றாலும் உடனே அதில் நானும் பார்டனர் என சொல்கிறார்கள். இந்த உடம்பு சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சிங்கப்பூர், அமெரிக்கா வரை போய்விட்டு வந்துள்ளது. எனக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் இங்குள்ள மருத்துவமனையில் தான் வெற்றிகரமாக நடந்தது.

ஒழுக்கம், நாணயம், ஈடுபாடு, விடாமுயற்சி என இந்த நான்கு விஷயம் யாரிடம் இல்லையோ அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. கமல் வீட்டருகே காவிரி மருத்துவமனை இருந்தது என்பது போய் காவிரி மருத்துவமனை அருகில் கமல் வீடு உள்ளது என சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது.

நான் இப்படி பேசுவதால் கமல்ஹாசன் தப்பா நினைக்காதீங்க. மீடியாக்காரர்களே ஒரு உதாரணத்திற்கு சொன்னேன். இங்க வந்த உடனே எனக்கு மீடியாவை பார்த்ததும் பயம் வந்துவிட்டது. அதுவும் தேர்தல் நேரத்தில் மூச்சுவிட்டால் கூட பயமாக உள்ளது. எல்லாவற்றிலும் கலப்படம் வந்துவிட்டது. மருந்திலும் கூட கலப்படம் வந்து இருக்கு'' என்றார் ரஜினி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.