விஜயபுரா : ஹைதராபாத்தில் இருந்து, ஹூப்பள்ளி நோக்கிச் சென்ற காரில், ஆவணங்களின்றி வைத்திருந்த 2.93 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, இம்மாதம் 16ம் தேதி முதல் கர்நாடகா உட்பட நாடு முழுதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக, அண்டை மாநிலங்களின் எல்லைகளிலும், மாவட்ட எல்லைகளிலும் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவு ஹைதராபாத்தில் இருந்து, ஹூப்பள்ளி நோக்கி, ஒரு டொயோட்டோ கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார், விஜயபுரா மாவட்டம், சிந்தகி பைபாஸ் சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, மஹாராஷ்டிரா பதிவு எண் உள்ள அந்த காரை அதிகாரிகள் மடக்கினர்.
காரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கட்டு, கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. எங்கிருந்து, யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர்.
காரில் இருந்த பைகளில் மொத்தம் 2,93,50,000 ரூபாய் இருந்தது. ஆனால், காரில் வந்த பாலாஜி நிக்கம், சச்சின் மோஹிதே ஆகியோர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
உரிய ஆவணங்களும் காண்பிக்கவில்லை. எனவே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். காரில் வந்த இரண்டு பேரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் கிடைத்ததால், தகலவறிந்த விஜயபுரா எஸ்.பி., ரிஷிகேசா சோனாவணே சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement