திருச்சூர் திருச்சூர் கோவில் விழாவில் இரு யானைகள் ஆக்ரோஷமாக மோதியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூர் அருகே ஆராட்டுப்புழாவில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பூரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் உபசாரம் சொல்லல் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ரவிகிருஷ்ணன், அர்ஜுனன் ஆகிய 2 யானைகள் அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் இரு யானைகளும் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்துகொண்டிருந்தது. ரவிகிருஷ்ணன் […]
