பாரம்பரிய 'படுகா' திருமணம் : மீதா ரகுநாத் பரவசம்

'முதலும் நீ முடிவும் நீ, குட் நைட்' ஆகிய இரண்டே தமிழ்ப் படங்களிலும் நடித்திருந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் மீதா ரகுநாத். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இரண்டே இரண்டு படங்களில் மட்டும் நடித்துவிட்டு இவ்வளவு சீக்கிரத்தில் அவர் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான்.

ஊட்டியைச் சேர்ந்த மீதா தனது பாரம்பரிய திருமணம் பற்றிய பரவசமான பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார். “ஒரு பாரம்பரியமான படுகா திருமணம் என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. காதலில் விழுவேன் என்பதும் நான் எதிர்பார்க்காத ஒன்றுதான், ஆனால் நான் காதலித்தேன். எனவே அதைத் தொடர்ந்து நடந்த படுகா திருமணம் ஒரு அழகான கொண்டாட்டமாக இருந்தது.

'மதில்' என்பது வில் போன்ற ஒரு அமைப்பு. நாங்கள் ஒரு 'ஹட்டி'யில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் திருமணத்திற்காக எங்கள் கலாச்சாரத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றைச் செய்ய விரும்பினோம். வீட்டில் இருப்பவர்களும் கலை மேதைகள் என்பதால் என் அம்மா மதில் மற்றும் அதைச் சுற்றியுள்ள யோசனையுடன் வந்தார். எனது சகோதரி முழு விஷயத்தையும் வடிவமைத்தார். வண்ணங்கள் முதல் அது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அனைத்தையும் அவர்கள் உருவாக்கினார்கள்.

திருமணத்தின் பெரும் பகுதி எங்கள் அனைவருக்கும் ஒரு வகையான கலைத்திட்டமாக இருந்தது. அன்பைக் கண்டுபிடிப்பது தெய்வீகமான நேரம். ஆனால், அது உங்கள் முன் வரும் போது, அதை அடையாளம் காணும் திறன், அதைத் தழுவும் தைரியம் ஆகியவை என்னை ஆசீர்வதித்ததற்காக இந்த பிரபஞ்சத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கும் குணங்களில் ஒன்றாகும்.

நீளமான கதை, சுருக்கமாக… நான் காதலித்தேன், ஒரு அழகான திருமணத்தை நடத்தினேன். இது பாரம்பரியமான படுகா திருமணம் என்பது ஒரு சுவாரசியமான கூடுதல் போனஸ்,” என பதிவிட்டுள்ளார்.

மீதாவின் திருமணம் பற்றிய பதிவுக்கும், அவருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.