பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைவரும் ஆட்டமிழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி 16 ஓவர்களில் முதல் 5 விக்கெட்டுகள் வீழ்ந்த போது, தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 102 ஓட்டங்களைப் பெற்று தமது அணியின் முதல் இன்னிங்ஸை கௌரவமான நிலைக்கு உயர்த்தினர்.

பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைவரும் ஆட்டமிழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக விஷ்வ பெர்னாண்டோ 04 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித தலா 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 418 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான இன்னிங்ஸை விளையாடியதோடு, தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களையும், காமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றி இலக்கை அமைவதற்கு 510 ஓட்டங்களை பெறவிருந்த  பங்களாதேஷ் அணி, அனைவரும் ஆட்மிழந்து 182 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. சிறப்பாக பந்துவீசிய கசுன் ராஜித 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணிக்காக மொமினுல் ஹக் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30ம் திகதி நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.