சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சேஷு. லட்சுமி நாராயண சேசு என்கிற முழுப் பெயரை சேஷு என சுருக்கி செல்லமாக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அழைத்து வந்தனர். வித்தியாசமான உடல்மொழியால் அனைவரையும் பார்த்த மாத்திரத்திலேயே சிரிக்க வைத்து விடும் கெட்டிக்காரர். வறுமையில் வாடினாலும்
