சென்னை அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்துள்ளார். தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடந்துவரும் நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மீதம் உள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் சாமானிய மக்களுடன் கலந்துரையாடுவது, பஸ் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் […]