ஆஸ்டரின் விலையை ரூ.38,000 வரை உயர்த்திய எம்ஜி மோட்டார்

எம்ஜி மோட்டாரின் ஆஸ்டர் எஸ்யூவி விலையை ரூ.31,800 முதல் ரூ.38,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரூ.9.98 லட்சம் முதல் ரூ.18.08 லட்சம் வரை அமைந்துள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற கிரெட்டா உட்பட பல்வேறு நடுத்தர எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

கூடுதலாக டூயல் டோன் நிறம் பெற்ற வேரியண்டுகள் விலை எக்ஸ்-ஷோரூம் விலையில் கூடுதலாக ரூ.20,000 வசூலிக்கப்படுகின்றது.

ஆஸ்டர் எஸ்யூவி 110 hp பவர் மற்றும் 150 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 hp பவர் மற்றும் 220 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் 6 வேக  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கின்றது.

இந்த காரில் ஆஸ்டர் Sprint, Shine, Select, Smart, Sharp Pro, மற்றும் Savvy Pro ஆகிய வேரியண்ட்டை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.