அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், நாகேஸ்வரம் கீழவீதி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிழா: தினமும் ராகுகால பூஜை நடப்பது விசேஷ அம்சம். புரட்டாசி மாதம் பூர நட்சத்திரத்தில் சுமங்கலி ஆராதனை நடக்கிறது. சுமங்கலிகள் இந்நாளில் வழிபட்டு மாங்கல்ய பலம் பெறலாம். ஆடி கடைசி வெள்ளியன்று திருவிளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்படும். மகாமகத்தன்று காமாட்சி அம்பிகை மட்டும் இங்கிருந்து மகாமக குளத்திற்கு எழுந்தருள்வாள். தல சிறப்பு: இந்த மண்டபத்தில் அம்பிகையின் முன்னிலையில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கிறது. பொது தகவல்: […]
