இந்த வாரத்தின் லேட்டஸ்ட் சினிமா தகவல்கள் இதோ!
தளபதி 69 – மீண்டும் சந்திப்போம்!
விஜய்யின் கடைசி திரைப்படம் குறித்தான அறிவிப்பு வந்திருக்கிறது. ‘துணிவு’ படத்திற்குப் பிறகு அ.வினோத் இப்படத்தை இயக்குகிறார். 5வது முறையாக விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். கன்னட சினிமாவின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இத்திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் அதை அதிகளவி ஷேர் செய்திருக்கிறார். விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரின் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் குறித்தான அறிவிப்பு மிகவும் ஸ்பெஷல்.
It’s unstoppable euphoria ❤️ #Thalapathy69 is at the top, trending with unconditional love and support across India and beyond. A big thank you and heartfelt gratitude.
You guys are awesome. Viraivil meendum sandhippom… Let’s rock!!
— KVN Productions (@KvnProductions) September 14, 2024
மக்களிடமிருந்து இப்படியான வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து படக்குழு இது தொடர்பாக ஒரு ட்வீட் போட்டிருக்கிறது. அதில், ” இது நிறுத்தமுடியாத பரவசம். தளபதி 69 ஹேஷ்டேக்தான் டாப் டிரண்டிங்கில் இருக்கிறது. இதற்கு இந்தியாவிலிருந்து இந்தியாவுக்கு வெளியே இருந்தும் நீங்கள் கொடுக்கும் அளவில்லா காதலும் உறுதுணையும்தான் காரணம். விரைவில் மீண்டும் சந்திப்போம்!” என படக்குழு குறிப்பிட்டிருக்கிறது.
ராஜு முருகன் வசனத்தில் கெளதம் கார்த்திக்!
கெளதம் கார்த்திக்கின் 19வது திரைப்படத்தை இயக்குநர் ராஜு முருகனின் உதவி இயக்குநர் தினா ராகவன் இயக்குகிறார். ராஜு முருகனிடம் ஜிப்ஸி, ஜப்பான் திரைப்படங்களில் உதவி இயக்குநராக இவர் பணியாற்றியிருக்கிறார். இப்படத்திற்கு ராஜு முருகனும் வசனங்களை எழுதுகிறார். இதற்கு, “தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்பாளியாகும் அத்தனை தகுதிகளும் நிரம்பியவன். அவனுக்கும் டீமுக்கும் அன்பும் வாழ்த்துகளும்!” என சிஷ்யனை வாழ்த்திப் பதிவிட்டிருக்கிறார் குரு ராஜு முருகன்.

முடிந்தது அமரன் டப்பிங்!
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் `அமரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்திருக்கிறார். இதற்கு ஸ்பெஷலாக படக்குழு வீடியோ ஒன்றையும் தயார் செய்து வெளியிட்டிருக்கிறது. தீபாவளி ரிலீஸை நோக்கி வெகுவாக நடந்து வருகிறது படத்தின் இறுதிகட்டப் பணிகள்.
ராகவா லாரன்ஸ் 25
ராகவா லாரன்ஸ் தன்னுடைய 25வது படத்திற்கு தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மாவுடன் கைகோத்திருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ரவி தேஜாவின் `கில்லாடி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. ‘Big Action Adventure Begins’ என்ற வாசகத்துடன் இப்படத்திற்கான அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. இதைத் தாண்டி வெற்றி மாறன் கதையில் உருவாகும் ‘அதிகாரம்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார். இதை இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்குகிறார். மேலும், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்திலும் லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார். இதை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்
BIG ACTION ADVENTURE BEGINS!❤️
My Next With “The Multi-Faceted ACTOR” @offl_Lawrence @AstudiosLLP, #NeeladriProductions & A #HawwishProduction next is going to be HUGE!
Stay Tuned for Exciting Updates!⌛️#RaghavaLawrence25 #RL25@idhavish #KoneruSatyanarayana… pic.twitter.com/tebI66AiI2
— Ramesh Varma (@DirRameshVarma) September 14, 2024
தும்பட் 2!
பாலிவுட் நடிகர் ஷோகம் ஷா நடிப்பில் ‘தும்பட்’ திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. பாலிவுட்டில் வெளியான முக்கியமான ஹாரர் படங்களில் ஒன்றாகவும் இத்திரைப்படம் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. ரசிகர்களிகளின் இப்படியான கொண்டாட்டத்திற்குப் பிறகு இப்படம் கடந்த 13-ம் தேதி ரீ- ரிலீஸானது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக நடிகர் ஷோகம் ஷா, ” தும்பட் 2 நல்ல ஒரு திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும். பேராசைக்கு எல்லையில்லாமல் போனால் எப்படி இருக்கும் என்பதை பல ட்விஸ்ட்களுடன் சொல்லவிருக்கிறோம். நாங்கள் உருவாக்கிய உலகத்திற்கு இந்த இரண்டாம் பாகம் பார்வையாளர்களை இன்னும் ஆழமாக அழைத்துச் செல்லும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…