புதுடெல்லி,
தனிநபர்களின் கணினிகள், மின்னஞ்சல்கள், சமூக வலைதள கணக்குகளை எந்த முன் அனுமதியுமின்றியும் அணுக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புதிய வருமான வரி மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு பிரிவு 19(1)(A)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாக இது கருதப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களையும் பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா குறித்து தற்போது பல்வேறு கவலைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், வருகிற 2026-27 நிதியாண்டு முதல் இந்த மசோதா அமலுக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.