ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக பறந்த ‘ஜாகுவார்’ போர் விமானம் ஒன்று மோர்னியின் பால்ட்வாலா கிராமத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் ‘விமானி’ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்திய விமானப் படையின் போர் திறனை வெளிப்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்த ‘ஜாகுவார்’ போர் விமானம் பாகிஸ்தானுடன் கார்கில் மற்றும் சியாச்சின் போரில் தனது வலிமையை பறைசாற்றியது. ஜாகுவார் என்பது குறைந்த உயரத்தில் பறக்கும் சூப்பர்சோனிக் (ஒலியின் வேகத்தை விட வேகமானது) போர் விமானமாகும். பிரிட்டன் மற்றும் […]
