வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபி பைனல் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்தின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி இந்தியாவுக்கு எதிரான பைனல் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மாட் ஹென்றிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வேகமாக வந்த பந்தை பிடிக்க முயன்ற போது, பந்து அவரது தோள்பட்டையில் பட்டது. உடனடியாக அவர் வலி தாங்க முடியாமல் மைதானத்தில் விழுந்தார்.
மேலும் படிங்க: ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!
மாட் ஹென்றி காயம்
இந்த தொடர் முழுவதும் மாட் ஹென்றி சிறப்பாக வந்து வீசியிருந்தார். இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டு விக்கெடுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடியிருந்தார். அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நியூஸிலாந்து அணியின் கேப்டன் சான்டனர், மாட் ஹென்றி பெரிய காயம் இல்லை என்றும், நிச்சயம் பைனலில் விளையாடுவார் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவருக்கு காயம் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
NO CLARITY ON MATT HENRY.
– Henry could be unavailable for the Champions Trophy Final Vs India. (Espncricinfo). pic.twitter.com/tfsdTSPrLj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 7, 2025
மாட் ஹென்றிக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரால் கையை நகர்த்த முடியவில்லை. பந்து வேகமாகப் பட்டதால் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம். இந்த சமயத்தில் அவரால் எப்படி பந்து வீச முடியும் என்று தெரியவில்லை. முடிந்தவரை அவர் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை பார்ப்போம். இந்த சமயத்தில் எதுவும் கூற முடியாது. இரண்டு எலும்புகள் சேரும் இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் நிச்சயம் குணமடைந்து பைனலில் விளையாடுவார் என்று நம்புகிறோம்” என்று நியூசிலாந்தின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மாட் ஹென்றி இதுவரை 5.32 சராசரியில் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒருவேளை பைனலில் மாட் ஹென்றி விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி அல்லது நாதன் ஸ்மித் ஆகிய இருவரில் ஒருவர் விளையாடலாம். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, நியூசிலாந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தது. அதன் பிறகு பங்களாதேஷ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. கடைசி லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்தாலும், அரையறுதியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தற்போது இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளனர்.
மறுபுறம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட இதுவரை தோல்வியடையவில்லை. இரண்டு அணிகளும் பலம் வாய்ந்திருப்பதால் யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் பைனலில் விளையாட உள்ளனர். கடைசியாக நியூஸிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. அதற்கு இந்தியா பலி தீர்க்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் படிங்க: IND vs NZ Final: ஹர்திக் பாண்டியா வெளியே.. அவருக்கு பதில் யார்? இந்தியாவின் பிளேயிங் XI என்ன?