Virender Sehwag Brother Arrested: இந்திய அணியின் அதிரடி தொடர்க்க வீரர் வீரேந்தர சேவாக். 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய வீரர் இவர். 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 8273 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8586 ரன்கள் குவித்துள்ளார். மொத்தமாக இவர் 38 சர்வதேச சதங்களையும், 70 சர்வதேச அரை சதங்களையும் விளாசி இருக்கிறார்.
இவர் 2013ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். தற்போது இவரது மகன் ஆர்யவீர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும், சமீபத்தில் சேவாக் மற்றும் அவரது மனைவி இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்களும் வெளியாகின. 3
மேலும் படிங்க: IND vs NZ Final: ஹர்திக் பாண்டியா வெளியே.. அவருக்கு பதில் யார்? இந்தியாவின் பிளேயிங் XI என்ன?
சேவாக் சகோதரர் கைது
இந்த நிலையில்தான், தற்போது வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 7 கோடி மதிப்பிலான செக் மோசடியில் வினோத் சேவாக் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐல்தா ஃபுட் மற்றும் பெவரேஜஸ் நிறுவனத்தை சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக், விஷ்ணு மிட்டல் மற்றும் சுதீர் மல்ஹோத்ரா ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் தங்களின் நிறுவனத்திற்காக கிருஷ்ணா மோசன் என்பவரின் ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனத்திடம் இருந்து பொருட்கள் வாங்கி இருக்கின்றனர். இதற்காக ரூ.7 கோடி செக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிருஷ்ணா மோசன் வங்கில் டெபாசிட் செய்த போது, செக் பவுன்ஸாகி உள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லாததால் செக்கானது பவுன்ஸாகி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா மோசன் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணைக்கு ஆஜாராக சம்பந்தப்பட்ட மூவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மூவரும் ஆஜாராகவில்லை. இந்த சூழலில், 2023ஆம் ஆண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வீரேந்தர் சேவாக்கின் தம்பி வினோத் சேவாக்கை சண்டிகரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் விசாரணை வரும் மார்ச் 10ஆம் தேதி நடக்க உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட வினோத் சேவாக் மீது 174 செக் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: ரோகித்தை கேப்டன் பதவில் இருந்து தூக்க திட்டமா.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?