தங்ககடத்தல் வழக்கில் கைது: ஜெயிலுக்குள் தூக்கமின்றி தவிக்கும் நடிகை ரன்யாராவ்

பெங்களூரு,

தங்ககடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யாராவ். கர்நாடக வீட்டுவசதித்துறை இயக்குனரான டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகள் ஆவார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லும் இவர் டி.ஜி.பியின் மகள் என்பதால் சோதனை நடத்தப்படாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் சென்றது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 1½ ஆண்டுகளாக இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதற்காக அவர் லட்சக்கணக்கில் சம்பளமாக பெற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.இந்த நிலையில் கோ ர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட நடிகை ரன்யாராவ் பெங்க ளூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 14 நாள் சிறையில் அடைக்கப் பட்டார்.

நடிகை ரன்யாராவ் ஜாமீன் கேட்டு பெங்களூரு பெருளாதார குற்றவியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதே போல் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. இதில் நடிகை ரன்யாராவ் நேரில் ஆஜர்படுத்த ப்பட்டார். அப்போது நடிகை ரன்யாராவிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கினார். மேலும் நடிகை ரன்யாராவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.இதையடுத்து நடிகை ரன்யாராவை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் தன்னை மிரட்டிய அரசியல் பிரமுகர்கள் பற்றி கூறியதாக தெரிகிறது. மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரபல நகை கடை உரிமையாளர்களிடம் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்தனர். மேலும் தேவைப்படும் போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நடிகை ரன்யாராவ் முகம் சோர்வாகவும், கண்கள் வீங்கியும் காணப்படுகிறது. தங்க கடத்தல் வழக்கில் தான் கைதானதால் அவர் சிறையில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அமைதியை இழந்து விட்டதால் கண்கள் வீங்கி விட்டதாக கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.