IPL 2025 SRH vs GT : சன்ரைசர்ஸ் அணியின் மெகா பிளான், சமாளிக்குமா குஜராத் டைட்டன்ஸ்?

IPL 2025 SRH vs GT: இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்து இப்போது ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அந்த அணி, இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. அதேநேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியுடன் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. 

சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் படுபயங்கரமான பலமான அணியாக இருந்தாலும், அதே தான் அந்த அணிக்கு மிகப்பெரிய வீக்னஸாகவும் இருக்கிறது. ஏனென்றால் முதல் போட்டியில் சிறப்பாக பேட்டிங் ஆடிய பிளேயர்கள் யாரும் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அந்த அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இன்றைய போட்டியில் அந்த தவறை செய்யக்கூடாது என முடிவெடுத்து களமிறங்க இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கை மட்டும் கட்டுப்படுத்திவிட்டால் குஜராத் அணி வெற்றி பெறலாம், இல்லை என்றால் இமலாய ரன்களை துரத்த வேண்டிய நிலைக்கு அந்த அணி தள்ளப்படும். 

ஐபிஎல் 2025: SRH vs GT பிளேயிங் 11

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் 11: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அபினவ் மனோகர், ஜீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல், முகமது ஷமி, இம்பாக்ட் பிளேயர் – வியான் முல்டர்

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் 11: சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, ஆர் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இம்பாக்ட் பிளேயர் : இஷாந்த் சர்மா

SRH vs GT நேருக்கு நேர் இதுவரை 

மொத்த போட்டிகள்: 5
SRH வென்றது: 3
ஜிடி வென்றது: 1
முடிவு இல்லை: 1

SRH vs GT நேரடி ஒளிபரப்பு விவரம் : 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD/SD-ல் பார்க்கலாம். அதேபோல் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் செயலியிலும் லைவ்வாக பார்க்கலாம். 

மேலும் படிங்க: ஐபிஎல்லில் எம். எஸ். தோனியின் டாப் 5 இன்னிங்ஸ்!

மேலும் படிங்க: கடுமையாக சொதப்பிய சென்னை பேட்டர்கள்.. டெல்லி அணி அபார வெற்றி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.