Kuldeep Yadav, Rinku Singh Fight : ஐபிஎல்லில் மீண்டும் ஒரு பிளேயர் இன்னொரு பிளேயரை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்துள்ளது. அது வேறுயாருமல்ல, குல்தீப் யாதவ் தான் ரிங்கு சிங்கை இரண்டு முறை அறைந்துள்ளார். இது ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் சிங்கின் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஐபிஎல் 2025-ல் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், கேகேஆர் பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை இரண்டு முறை அறைந்தார். இதுஒரு சர்ச்சையாக மாறாவிட்டாலும், இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நெட்டிசன்கள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கிண்டலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஐபிஎல்லில் இரண்டு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடுகின்றனர். குல்தீப் டெல்லி அணிக்காகவும், ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காகவும் விளையாடுகின்றனர். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருவரும் உத்தரபிரதேசத்திற்காக ஒன்றாக விளையாடுகிறார்கள். இப்போது, சமூக ஊடகங்களில் வைரலான அந்த வீடியோவில், இருவரும் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்போது, குல்தீப் யாதவ், தன்னை கிண்டலடித்த ரிங்குவை அறைந்துவிடுகிறார். அதற்கு ரிங்கு எந்த பதிலும் சொல்லவில்லை, ஆனால் அவளுடைய முகபாவனைகள் கொஞ்சம் அதிருப்தியைக் காட்டின. அவர் கோபமாகத் தெரிந்தார். அப்போதும் குல்தீப் மீண்டும் அடித்தார். இருப்பினும், சிலர் இது ஒரு சம்பவம் அல்ல, மாறாக வீரர்களுக்கு இடையிலான வேடிக்கை மற்றும் நகைச்சுவையின் ஒரு பகுதியே என்று கூறியுள்ளனர்.
pril 29, 2025
ஆனால், சமூக ஊடகங்களில் பலர் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் குல்தீப் நடத்தையை கடுமையாக விமர்சித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதியை அவரது ‘நோட்புக் கொண்டாட்டத்திற்காக’ கண்டிக்க பிசிசிஐ ஆல் முடியுமானால், குல்தீப் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் போட்டியில் குல்தீப் 3 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை. பேட்டிங் செய்யும்போது, அவர் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம், கொல்கத்தா அணிக்காக ரிங்கு சிங் 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இதில் அவர் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார்.
ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜன்!
ஐபிஎல்லில் ஒரு வீரர் அறையப்படுவது இது முதல் முறை அல்ல. ஐபிஎல் போட்டியின் முதல் சீசனில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்தார். அந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையேயான போட்டிக்குப் பிறகு இந்த சம்பவம் நடத்தது. இது பெரும் சர்ச்சையாக வெடித்து ஹர்பஜன் சிங் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
மேலும் படிங்க: வைபவ் சூரியவன்ஷி இல்லை! ஐபிஎல்லில் அதிவேக சதம் அடித்தது இவர் தான்!
மேலும் படிங்க: CSK: தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார்… ஹசி புகழாரம் – ஷாக்கில் ரசிகர்கள்