புதுடெல்லி,
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,
கடந்த ஏப்., மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.37 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. 2017-ல் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து அதுவே அதிகபட்சமாகும். இது கடந்த ஆண்டு ஏப்., மாதம் வசூலான 2.10 லட்சம் கோடி ரூபாயை காட்டிலும் 12.6 சதவீதம் அதிகம் ஆகும். உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைத்த வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்து 1.89 லட்சம் கோடி ரூபாயாகவும், இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் 21 சதவீதம் அதிகரித்து 46,900 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஏப்., மாதம் வசூலான ஜிஎஸ்டியானது பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதை காட்டுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் 2025ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.