நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் இன்று (மே 01) ஜெய்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரிக்கில்டன் களம் இறங்கினர். இவர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இந்த கூட்டணியை பிரிக்க 116 ரன்கள் விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. ரிக்கில்டன் 61 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து ரோகித் சர்மாவும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாட மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் தலா 48 ரன்களை சேர்த்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் வழக்கம்போல் சூர்யவன்சியாலும் ஜெய்ஸ்வாலாலும் ரன்கள் சேர்க்க முடியவில்லை. கடந்த போட்டியில் சதம் விளாசிய 14 வயது இளம் வீரர் சூர்யவன்சி இப்போட்டியில் டக் அவுட் ஆனார்.
இதையடுத்து ஜெஸ்வால் 13, நிதீஷ் ராணா 9, ரியான் பராக் 16, துருவ் ஜூரல் 11, ஹெட்மயர் 0, துபே 15 தீக்ஷனா 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஆர்சர் மட்டுமே 30 ரன்களை சேர்த்திருந்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணியும் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் வது இடத்திற்கு முன்னேறியது.
மேலும் படிங்க: கிரிக்கெட்டில் இத்தனை வகையான டக்-அவுட்டா? முழு பட்டியல் இதோ!
மேலும் படிங்க: மும்பை ரசிகர்களுக்கு ஷாக்.. அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!