மும்பை ரசிகர்களுக்கு ஷாக்.. அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் சொதப்பி முதல் 5 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அடுத்த 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதன்படி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இத்தொடரில் அறிமுகமான இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் தற்போது விலகி உள்ளார். அவருக்கு தாடை பகுதியில் எலும்பு அழுத்த எதிர்வினை ஏற்பட்டு இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இதனால் இத்தொடரில் இருந்து அவர் விலகி உள்ளார். விக்னேஷ் புத்தூருக்கு பதிலாக ரகு சர்மா என்ற உள்நாட்டு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி மாற்று வீரராக தேர்வு செய்திருக்கிறது. 

கேரளாவை சேர்ந்த விக்னேஷ் புத்தூர் மும்பை அணியில் தனது திறமையை வெளிப்படுத்திய நிலையில், அவர் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் தற்போது அவர் காயம் காரணமாக வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் விளையாடிய 5 போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதிலும் 3 விக்கெட்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் அந்த ரகு சர்மா?

2024-2025 விஜய் ஹசாரே டிராபி தொடரில் ரகு சர்மா பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதில் 9 போட்டிகளில் விளையாடிய அவர், 14 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இதன் காரணமாகவே விக்னேஷ் புத்தூருக்கு இணையான மாற்று வீரராக ரகு சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (மே 01) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .

மேலும் படிங்க: வைபவ் சூர்யவன்சிக்கு வந்த சோதனை.. அடுத்த ஓராண்டுக்கு அணியில் இடமில்லை!

மேலும் படிங்க: விராட் கோலி விரும்பிக் கேட்கும் தமிழ் பாடல் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆவீங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.