60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

கிட்டத்தட்ட 20 வருடங்களா நீங்க நல்லா உழைச்சாச்சு! கொஞ்சம் காசும் சேர்த்து வச்சுட்டீங்க. சிலர் வீடும் வாங்கியிருப்பீங்க, அதுக்கு சிலர் இ.எம்.ஐ-யும் கட்டிட்டு இருப்பீங்க. ஒருபக்கம் குழந்தைகளின் படிப்பும் போயிட்டு இருக்கும். ஆனா இப்போ உங்களோட மிகப்பெரிய கேள்வியே, ஒரு 55-60 வயசுல என்கிட்ட இப்ப மாதிரியே காசு இருக்குமா? வயசான காலத்துல மாசாமாசம் நம்மளோட தேவைகளை எப்படி பூர்த்தி பண்ணுறது? 

வயசான காலத்துல ஃபிக்சட் டெப்பாசிட்ல காசு போட்டு வைக்கலாம்னா குறைஞ்ச வட்டிதான் கிடைக்கும். வாடகைப் பணம் வரும்னு பார்த்தா எல்லார்கிட்டயும் வாடகைக்கு விட வீடோ, கடையோ, வாகனமோ இருக்காது. பிசினஸ் பண்ணலாமான்னு பார்த்தாலும் அதுல ரிஸ்க் நிறைய இருக்கு!

வழிகாட்டல் வெபினார் தகவல்கள்
வழிகாட்டல் வெபினார் தகவல்கள்

கொஞ்சம் யோசிச்சுதான் செயல்படணும்!

60 வயசுக்கு மேல, கையில பணம் இல்லைனா மிகப்பெரிய கஷ்டம். ஒவ்வொரு மாதமும் நாம யாரையோ நம்பித்தான் வாழ வேண்டியிருக்கும்! 

இந்த மாசம் மருத்துவ செலவுக்கு என்ன பண்ணுறது? இதுவரை நல்லா வாழ்ந்துட்டேன், இனியும் அப்படி வாழ முடியுமா? நம்ம பசங்க நம்மளை கடைசி வரை வெச்சு காப்பாத்துவாங்களா? இந்தக் கேள்விகளுக்கு நம்மகிட்ட பதில் இல்லைனா நம்முடைய ஓய்வுக்காலத்தை நிம்மதியா கழிக்க முடியாது! நீங்க 10-50 லட்ச ரூபாய் சேர்த்து வைச்சாலும், அதை வங்கியில் வச்சிருந்தா, கொஞ்ச வருஷத்துல அது பணவீக்கம் (விலை வாசி உயர்வு) காரணமா அதன் மதிப்பை இழந்துரும்!

இதுக்கெல்லாம் தீர்வுதான் SWP!

ஓய்வுக்காலத்தை நிம்மதியா கழிக்க நினைப்பவங்களுக்கு ‘சிஸ்டேமேட்டிக் வித்டிராவல் பிளான்’ எனப்படும் SWP மிகப்பெரிய பக்கபலமா இருக்குது! இதன் மூலம் நீங்க சேர்த்து வைச்சிருக்கிற ஒரு பெரிய தொகையை ஸ்மார்ட்டா முதலீடு பண்ணி, அதன்மூலம், உங்க இறுதிக்காலம் வரை மாசாமாசம் ஒரு பென்ஷன் தொகையைப் பெற முடியும்! மேலும் நீங்க சேர்த்த முதலும் குறையாம அப்படியே இருக்கும்.

ஸ்கேன் செய்யுங்க
ஸ்கேன் செய்யுங்க

தற்போது பெரிய தொகை கையில் இல்லையா? கவலைப்படாதீங்க!

இதுவரை எந்தவித சேமிப்போ, முதலீடோ செய்யாதவரா? உங்களுக்காக ஒரு கணக்கு:

ராஜேஷ்,

வயசு – 40

முதலீடு – இதுவரை எதுவும் இல்லை

மாதச் சம்பளம்: ரூ. 50000

இனிமேல் மாத SIP முதலீடு: ரூ . 15000

முதலீட்டின் வளர்ச்சி: ஆண்டுதோறும் 13%வருடாவருடம்

முதலீடு அதிகரிப்பு விகிதம்: 10%

ஓய்வுக்கால வயது: 60

மொத்த முதலீட்டுக் காலம்: 20 வருடங்கள்

60 வயதில் கையில் கிடைக்கும் தொகை: 2.7 கோடி ரூபாய்

தன்னுடைய 60-வது வயசுல ராஜேஷிடம் 2.7 கோடி ரூபாய் இருக்கும்.

இதிலிருந்து 100 வயது வரை, மாதாமாதம் SWP மூலம் 1 லட்சத்தி 12 ஆயிரம் ரூபாயை பென்ஷனாக அவர் பெற முடியும்!

100 வயது ஆன பின்பும், அவரிடம் 11 கோடி ரூபாய் இருக்கும், அதைத் தன் குடும்பத்திற்கு விட்டுச் செல்லலாம்.

அருமையான இந்த SWP திட்டம் பத்தி மேலும் தெரிஞ்சுக்கணுமா?

உங்களுக்கான பிரத்தியேக SWP திட்டம் வேணுமா? 

மறக்காம விகடன் ‘லாபம்’ நடத்தும், “SWP – மாதந்தோறும் பென்ஷன் பெறுவதற்கான ஈஸி வழி…” வெபினாரில் கலந்துக்கோங்க!

நாள்: மே 4, 2025, ஞாயிறு
நேரம்: காலை 11 மணி (இந்திய நேரம்)
பேச்சாளர்கள்: N ஜெயகுமார், Chartered Financial Analyst & ஏ.ஆர். குமார், சிஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்.

150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். கட்டணம் ஏதுமில்லை.
முன்பதிவுக்கு: https://forms.gle/5bwq86An4mSMA8zb8

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.