புதுடெல்லி,
பாலிவுட்டில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தம்பதியாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி உள்ளது. அவர்களுடைய பாச பிணைப்பை ரசிகர்கள் எப்போதும் பாராட்டி வருகின்றனர். கோலியின் சமூக ஊடக பதிவுகளை பார்வையிட்டு, அவற்றை லட்சக்கணக்கானோர் லைக் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகை அவ்நீத் கவுர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பச்சை நிறத்தில் கவர்ச்சியான தோற்றத்தில் மேலாடையும், அதற்கு இணையான நிறத்தில் குட்டை பாவாடையும் அணிந்தபடி அவர் காணப்பட்டார்.
அதற்கு பல ரசிகர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர். இதயம் எமோஜிக்களையும், அன்பை வெளிப்படுத்தும் வகையில் விமர்சனங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அவ்நீத்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு கோலி லைக் தெரிவித்து உள்ளார். இதனை கவனித்த கோலி மற்றும் அனுஷ்காவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோலி அவர்களே, என்ன செயல்பாடு இது? என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். எனினும், உடனடியாக அதனை கோலி அன்லைக்கும் செய்து விட்டார்.
இந்த புகைப்படங்களை லைக் செய்ததற்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. என்னுடைய பதிவுகளில் வேண்டாதவற்றை நீக்கம் செய்யும்போது, தவறுதலாக லைக் ஆக பதிவாகி இருக்க கூடும்.
இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். உங்களுடைய புரிதலுக்காக நன்றி என அவர் தெரிவித்து உள்ளார்.