பிரசத்தி பெற்ற 125சிசி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் புதிய மாசு விதிமுறைகளுக்கு உட்பட்ட OBD-2B மேம்பாடு வெளியிடப்பட்டு ஆரம்ப விலை ரூ.1,02,582 முதல் ரூ.1,08,097 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான மாடலை விட விலை ரூ.2,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஒற்றை இருக்கை கொண்ட மாடலில் இன்னும் இந்த மேம்பாட்டினை இந்நிறுவனம் உறுதி செய்யவில்லை.
- XTREME 125R IBS OBD2B – ₹ 1,02,582
- XTREME 125R ABS OBD2B – ₹ 1,08,097
124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.