நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இயக்குநர் தேசிங்கு பெரிய சாமியை உதாரணம் காட்டி மோட்டிவேஷனலாகப் பேசியிருக்கிறார்.
” காலேஜ் படிக்கும்போது எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் வேறு யாரும் இல்லை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிதான்.
அவர் காலேஜ் படிக்கும்போது எப்படி இருந்தார் என்று எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நாங்கள் இருவரும் நாடகக் குழுவில் இருந்தோம். நான் என்ஜினியரிங் படித்தேன்.

அவர் கம்பியூட்டர் டெக்னலாஜி படித்தார். ஒரு நாள் புரொபசர் எல்லோருக்கும் விடைத்தாளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். எல்லாரும் அவர்களின் விடைத்தாளை ஆர்வமாக புரட்டிப் பார்ப்பார்கள்.
எல்லோரும் 90, 80, 75 என்று மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள். ஆனால் தேசிங்கு பெரியசாமி மட்டும் விடைத்தாளைப் புரட்டவே மாட்டார். ஏனென்றால் எப்போதும் கடைசி மதிப்பெண்தான் எடுப்பார்.
தேசிங்கு காலேஜ் படிக்கும்போது இப்படிதான் இருந்தார். ஆனால் அவருக்கு சினிமா மீது அதிக ஆர்வம் இருந்தது.
அந்த ஆர்வத்தால் அவர் படம் எடுத்தார். ஏன் இதை சொல்கிறேன் என்றால் நம் வாழ்க்கையில் 20, 25 வருடங்கள் நிறைய விஷயங்களை முயற்சி செய்து பரிசோதித்துப் பார்ப்பதற்கானக் காலகட்டமாகவே இருக்கும்.
அந்த சமயங்களில் நமக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாது. 30 வயதில் நீங்கள் தோல்வியைச் சந்தித்து இருந்தால் அதுதான் மிகச்சிறந்த பரிசு. கரியரில் தோல்வி அடைந்தவர்களும், ரிலேஷன்ஷிப்பில் தோல்வி அடைந்தவர்களும் அதிர்ஷ்டசாலிகள். அந்தத் தோல்விதான் வாழ்கையில் நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும்.

அந்தத் தோல்விதான் வாழ்கையில் நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும். IIT, KOTA மாதிரியான கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை கேள்விபடும்போது ஏன்? எதற்காக? இவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.
95% மதிப்பெண் எடுக்கும் இடத்தில் 90% சதவிகித மதிப்பெண் எடுத்தால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் ஜெயிக்கும் சிலரைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் கடைசி பென்ச் மாணவர்களாகத்தான் இருப்பார்கள்.
முதல் பென்ச்சில் இருப்பவர்கள், கடைசி பென்ச் மாணவர்களின் நிறுவனங்களில் பணி செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…