இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

Live Updates

  • 8 May 2025 1:04 PM IST

    ராஜஸ்தான் – பாக்., எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்.. சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட உத்தரவு

    ராஜஸ்தான், பாகிஸ்தானுடனான தனது எல்லையை முழுமையாக மூடி உள்ளது. இந்நிலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (BSF) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp Share

  • 8 May 2025 1:02 PM IST

    சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து

    இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் காரணமாக வான் மண்டல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து செல்லும் 5 விமானங்களும் சென்னைக்கு வரும் 5 விமானங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp Share

  • 8 May 2025 12:59 PM IST

    போர் பதற்றம்: பஞ்சாப், ராஜஸ்தானில் பள்ளிகள் மூடல்.. போலீசார் விடுமுறை ரத்து

    எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரு மாநிலங்களிலும், போலீசாரின் விடுமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp Share

  • 8 May 2025 12:58 PM IST

    பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா

    ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக பஞ்சாப்பில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.

    • Whatsapp Share

  • 8 May 2025 12:34 PM IST

    தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்: ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துரைமுருகன் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp Share

  • 8 May 2025 11:59 AM IST

    பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை 13 இந்தியர்கள் பரிதாப பலி

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • Whatsapp Share

  • 8 May 2025 11:53 AM IST

    இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் – 05.05.25 முதல் 11.05.25 வரை

    திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன

    • Whatsapp Share

  • 8 May 2025 11:51 AM IST

    தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி

    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9 மணி அளவில் வெளியானது. இந்த தேர்வில் மாணவி ஆர்த்திகா இரண்டாவது குரூப் படித்து வந்துள்ளார். அதில் ஒவ்வொரு பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார்.

    • Whatsapp Share

  • 8 May 2025 11:50 AM IST

    நிர்வாகத் திறனற்ற நான்காண்டு ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

    அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை ‘ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி, நிதிப் பற்றாக்குறை, கடன் வாங்குவதில் முதலிடம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கேந்திரமாக மாறிய தமிழ் நாடு, தினசரி கொலைகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 

    • Whatsapp Share

  • 8 May 2025 11:21 AM IST

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தோல்வியடைந்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவே துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp Share

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.