சென்னை சென்னையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ள்ளது. இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், “வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் கலைஞர் ஆட்சியில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். கலைஞர் வருமுன் காப்போம் என்ற பெயர் மாற்றம் இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது. ஒவ்வொரு மாநகராட்சிகளில் நான்கு இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. சென்னையில் 14 மண்டலங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. […]
