இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

Live Updates

  • 12 May 2025 11:48 AM IST

    டெஸ்ட் கிரிக்கெட்  போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

    • Whatsapp Share

  • 12 May 2025 11:04 AM IST

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்கென சேட்டிலைட் அமைக்கும் திட்டத்தை விரைவில் முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நிறுவும் பட்சத்தில் இந்திய ராணுவத்திற்கு பெரும் உதவியாக இந்த சேட்டிலைட் திகழும் என்றும் விண்வெளியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து நிற்கும் என்றும் விண்வெளி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    • Whatsapp Share

  • 12 May 2025 10:37 AM IST

    முப்படைகளின் இயக்குநர் ஜெனரல் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், முப்படைகளின் இயக்குநர் ஜெனரல் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • Whatsapp Share

  • 12 May 2025 9:42 AM IST

    தங்கம் விலை அதிரடியாக குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.8,880-க்கு விற்பனையாகிறது.

    • Whatsapp Share

  • 12 May 2025 9:32 AM IST

    இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் ஆகிறது.

    • Whatsapp Share

  • 12 May 2025 9:10 AM IST

    பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

    “தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளாருமான, அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    • Whatsapp Share

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.