Virat Kohli Test Retirement: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார்.
இதுகுறித்து விராட் கோலி அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் பேக்கி ப்ளூ தொப்பி அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையை கூற வேண்டுமென்றால், இந்த பார்மட் என்னை இத்தனை தூரத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அது (டெஸ்ட் கிரிக்கெட்) என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, வாழ்க்கை முழுவதும் நான் சுமந்து செல்லக்கூடிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
வெள்ளை நிற ஆடையில் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட ஒன்று விஷயம் இருக்கிறது. அமைதியான மோதல், அதிக நாட்கள், யாருமே பார்க்காத அந்த சிறிய தருணங்கள்… ஆனால் அவை எப்போதும் உங்களுடனேயே இருக்கும். நான் இந்த பார்மட்டில் இருந்து விலகும் இந்த முடிவு, எளிதானது அல்ல – ஆனால் அது சரியானதாக உணர்கிறேன். நான் அதற்கு (டெஸ்ட் கிரிக்கெட்) என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அது எனக்கு திருப்பித் தந்துள்ளது.
என்னுடன் விளையாடிய வீரர்கள், வழியில் நான் கடந்து வந்த ஒவ்வொரு நபருக்கும் எனது நன்றியை நிறைந்த இதயத்துடன் கூறுகிறேன். நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் நினைவுக்கூர்வேன்” என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram