6,000+ ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்!

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக அளவில் சுமார் 2,28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதே போல் 10,000 ஊழியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பியிருந்தது.

இந்நிலையில், தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக செவ்வாயன்று அறிவித்துள்ளது. 2024-2025 கடைசி காலாண்டில், அதாவது இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் வரை மூன்று மாதங்களில் இந்நிறுவனத்தின் லாபம் எதிர்பார்ப்புகளை விட அதிகமாகத்தான் இருந்திருக்கிறது.

இருப்பினும், தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டிருக்கும் போட்டியை சமாளிப்பதற்காக செயற்கை நுண்ணறிவை (AI) நோக்கி கவனம் செலுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் டெக் துறையில் பணிபுரியும் பலருக்கும் பெரிய அச்சத்தைக் கடத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.