நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டம் இன்று (மே 20) டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதை வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். ஆனால் டெவான் கான்வே 10 ரன்களில் ஆட்டம் இழக்க, அவரை தொடர்ந்து வந்த உர்வில் பட்டேல் டக் அவுட் ஆனார். தொடர்ந்து அஸ்வின் 13, ரவீந்திர ஜடேஜா 1 ரன்கள் என அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். ஆயுஷ் மாத்திரை, டிவால்ட் புரூவிஸ் மற்றும் சிவம் தூபே ஆகியோர் மட்டுமே ஒரளவுக்கு ரன்களை சேர்ந்தனர்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக யுத்விர் சிங் மற்றும் ஆகாஷ் மத்வால் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
அந்த அணியில் தொடக்க வீரர்கள், ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி சிற்ப்பாக விளையாடினர். ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் சூர்யவன்ஷி அரைசதம் விளாசிய பின்னரே பெவிலியன் திரும்பினார். இதையடுத்து சஞ்சு சாம்சன் 41 ரன்கள் துருவ் ஜுரல் 31 ரன்களையும் அடித்தனர். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 188 ரன்களை 17.1 ஓவர்களில் எட்டி வெர்றி பெற்றது. சென்னை அணி இந்த போட்டியை வென்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்காவது முன்னேறும் என எதிர்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து இத்தொடரை 10வது இடத்திலேயே முடிக்க உள்ளது. .
மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!
மேலும் படிங்க: இனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? – இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!