கூகுளில் இருந்து உங்கள் தகவல்களை முழுமையாக நீக்குவது எப்படி?

Google Latest News : எதற்கெடுத்தாலும் கூகுள் வெப் பிரவுசரை பயன்படுத்தும் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் நிறைய ஆன்லைனில் நிச்சயம் இருக்கும். இது மோசடி செய்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படலாம். எனவே, Google தேடலில் இருந்து உங்கள் தகவல்களை அகற்றுவது எப்படி, இதற்கு Google உதவியை பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எப்போது தெரியும்?

முதலில், உங்கள் தகவல் கூகிள் தேடலில் (Google Search) தெரிகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இதற்கு நீங்கள் Results About You என்ற கூகிள் கருவியின் உதவியைப் பெறலாம். இதைப் பயன்படுத்த, உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களை உள்ளிடவும். பின்னர் மின்னஞ்சல் வழியாக தகவல்களை பெற வேண்டுமா அல்லது கூகிள் செயலி வழியாக அறிவிப்புகளைப் பெற வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, உங்கள் தனிப்பட்ட தரவுகளைக் கொண்ட Google Search முடிவுகளைக் கொண்ட ஒரு பட்டியலை Google உங்களுக்கு அனுப்பும். இந்தப் பக்கத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்களைப் பற்றிய என்னென்ன தகவல்கள் கூகுளில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், அதன் வழியாக நீங்கள் Google -லிருந்து அகற்ற விரும்பும் தகவல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

Google Search தகவல்களை அகற்றுவது எப்படி?

2025 முதல், மொபைல் மற்றும் கணினிகள் இரண்டிலும் Google Search -லிருந்து உங்கள் தகவல்களை அகற்ற கூகிள் ஒரு புதிய வழியை வழங்கியுள்ளது. உங்கள் தனிப்பட்ட தகவலை Results About You என்ற ஆப்சனில் பார்க்கும் இடத்தில், அதற்கு அடுத்துள்ள மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்து, ‘Remove result’ விருப்பத்தைக் கிளிக் செய்யவும். பிறகு நீங்கள் ஏன் அதை நீக்க விரும்புகிறீர்கள் என்று சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் கோரிக்கையின் பேரில் கூகிள் என்ன செய்தது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.

உங்கள் தரவை நீக்கக் கேட்கவும்

அரசு ஆவண எண்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், உங்கள் கையொப்பம், சமூக ஊடக கணக்குகளின் லாகின் விவரங்கள், மருத்துவ பதிவுகள், உங்கள் பெயருடன் தொடர்புடைய மோசமான விஷயங்கள், உங்கள் டீப்ஃபேக் புகைப்படங்கள் போன்ற சில வகையான தனிப்பட்ட தகவல்களை நீக்குவதற்கான கோரிக்கையை நீங்களே அனுப்பலாம். சில நேரங்களில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூட தகவலை அகற்றக் கோர கூகிள் உங்களை அனுமதிக்கிறது. இதற்கு, Google Results About You பக்கத்திற்குச் செல்லவும். இங்கே நீங்கள் Google-ஐ நீக்கக் கேட்கக்கூடிய விஷயங்களின் பட்டியலையும் அகற்றும் படிவத்திற்கான இணைப்பையும் காணலாம்.

வலைத்தளம் உங்களுடையதாக இருந்தால்

உங்களுக்குச் சொந்தமான வலைத்தளத்தில் தனிப்பட்ட தகவல்கள் இருந்தால், Google Search-ல் அந்தப் பக்கங்கள் தோன்றுவதைத் தடுக்க robots.txt பைல்கள், மெட்டா Tags அல்லது பாஸ்வேர்டு போன்ற கருவிகளைப் பயன்படுத்துமாறு Google பரிந்துரைக்கிறது.

பிற வலைத்தளங்களில் உள்ள தகவல்

உங்கள் தகவல் வேறொரு வலைத்தளத்தில் இருந்தால், முதலில் அந்த வலைத்தளத்தின் உரிமையாளரிடம் பேசி அதை நீக்கச் சொல்ல வேண்டும் என்று கூகிள் கூறுகிறது. இது வேலை செய்யவில்லை என்றால் அல்லது நீங்கள் பேச விரும்பவில்லை என்றால், கூகிள் உங்களிடம் அந்தத் தகவலைப் பற்றியும், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கப் பகிரப்பட்டதா (டாக்ஸிங்) என்றும் கேட்கும். அதனை கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட வலைதளத்திற்கு தகவல் அனுப்பி நீக்க வலியுறுத்தும்.

பழைய தகவலை நீக்கவும்

உங்கள் வலைத்தளத்திலிருந்து தனிப்பட்ட தகவல்களை நீக்கியிருந்தாலும், அது இன்னும் Google முடிவுகளில் தோன்றினால், பழைய தகவல்களை அகற்றுமாறு நீங்கள் கேட்க வேண்டும். கூகிளின் Remove Results படிவத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 1,000 வலைத்தள முகவரிகளை (URLகள்) சமர்ப்பிக்கலாம். இதேபோல், கூகிள் படங்களிலிருந்து பழைய படங்களை அகற்ற, படத்தின் URL ஐ அனுப்பலாம்.

உங்கள் தகவலை நீக்குவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, Google உங்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பும். நீங்கள் அதைப் பெறவில்லை என்றால், கோரிக்கையை மீண்டும் அனுப்புங்கள். கூகிள் உங்கள் கோரிக்கையைப் பார்த்து, கூடுதல் தகவல்களை உங்களிடம் கேட்கக்கூடும். இதற்குப் பிறகு, தகவல் நீக்கப்பட்டதும் கூகிள் உங்களுக்குத் தெரிவிக்கும். உங்களைப் பற்றிய தகலை கூகுள் தானாகவே நீக்காது, நீங்கள் கோரிக்கை வைத்தால் மட்டுமே நீக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.