'வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை' – டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்தில், யூத அருங்காட்சியகத்திற்கு அருகே நடந்த தாக்குதலில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீன ஆதரவு நபர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“யூத எதிர்ப்பு பயங்கரவாதம் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் வேதனை அளிக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.